ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்புத் தகுதி அளிக்கும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 370, 35ஏ ஆகிய பிரிவுகள் நாடாளுமன்ற ஒப்புதலுடன் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பல்வேறு தரப்பினர் தங்களது கருத்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோவுக்கு, குடியரசு கட்சி எம்.பி. தாமஸ் சுயோஸி (Thomas Suozzi) கடிதம் எழுதியுள்ளார்.
அதில், "இந்தியா-பாகிஸ்தான் மோதலுக்கு முக்கிய காரணங்களுள் ஒன்று காஷ்மீர். காஷ்மீர் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி எடுத்துள்ள முடிவு அப்பகுதியின் பதற்ற நிலையை மேலும் அதிகரித்துள்ளது. காஷ்மீர் தன்னாட்சியை நீக்கிய நடவடிக்கை பயங்கரவாதிகளுக்கு துணிவூட்டலாம்" எனக் கூறியிருந்தார்.
இது அமெரிக்கவாழ் இந்தியர்கள் இடையே பெரும் கண்டத்துக்கு உள்ளாகியது. இதையடுத்து, காஷ்மீர் குறித்து சரியான ஆலோசனை செய்யாமல் தான் எழுதிய கடிதத்துக்கு தாமஸ் சுயோஸி அமெரிக்கவாழ் இந்தியர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்டுள்ளார்.