இந்தியா, சீனாவுக்கு இடையே எல்லையில் நடந்த சண்டையில்; இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு வீர மரணமடைந்தனர். இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் பயன்படுத்தப்படும் 59 சீன செயலிகளுக்குத் தடை விதித்தது, மத்திய அரசு. டிக்டாக் உள்ளிட்ட வருமானம் தரும் செயலிகள் தடைசெய்யப்பட்டதால், இதன் பயனர்கள் பெரும் அவதிக்கு ஆளாகினார்கள்.
இவ்வேளையில் இந்தியாவைப் பின்பற்றி அமெரிக்காவிலும் டிக்டாக்கை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. அமெரிக்காவில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பிற்கு இதுகுறித்து கடிதமும் எழுதியுள்ளனர்.
அதில், 'அதிநவீன உளவு பார்க்கும் கருவியாக டிக்டாக் அமெரிக்காவில் செயல்பட்டு வருகிறது. சீன அரசு இதனைப் பயன்படுத்தி அமெரிக்க மக்களின் தகவல்களைத் திருடிக் கொள்ளும் அபாயமும் உள்ளது.