அல்கொய்தா மற்றும் தலிபான் பயங்கரவாத அமைப்பை கட்டுக்குள் கொண்டுவர அமெரிக்கா தனது ராணுவத்தை ஆப்கானிஸ்தானுக்கு கடந்த 2002ஆம் ஆண்டு அனுப்பியது. அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் அமெரிக்க ராணுவத்தால் கடந்த 2011ஆம் ஆண்டு கொல்லப்பட்டார்.
அத்துடன் ஆப்கானில் இருந்த தலிபான் ஆட்சியை நீக்கி புதிய ஜனநாயக அரசை அமெரிக்கா நிறுவியது. இந்நிலையில், ஆப்கானில் நீண்ட காலமாக உள்ள பாதுகாப்பு படையினரை திரும்பப் பெறும் முயற்சியில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தீவிரமாக களமிறங்கியுள்ளார்.
இதற்காக அமெரிக்கா - தலிபான் இடையே அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்பட்டு சுமார் 8,600 ராணுவ வீரர்கள் திரும்ப கொண்டுவரப்படுவார்கள் என பாதுகாப்புத்துறை செயலர் ஜோனத்தன் ஹாஃப்மேன் தெரிவித்துள்ளார். ஆப்கான் அரசுடன் ஒருங்கிணைந்து பணிகள் விரைவாக மேற்கொண்டுவருவதாகத் தெரிவித்த அவர், இந்தாண்டு இறுதிக்குள் இந்த பணிகள் நிறைவடையும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:'உனக்கு நான் இருக்கேன் நண்பா' - கரோனா போரில் மோடிக்கு உதவும் ட்ரம்ப்!