தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஜெருசலேமில் பிறந்த அமெரிக்க குடிமக்களுக்கு சிறப்பு சலுகை - அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ

ஜெருசலேமில் பிறந்த அமெரிக்க குடிமக்கள் தங்கள் பிறப்பிடத்தை கடவுச்சீட்டில் தேர்வு செய்ய சிறப்புச் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

மைக் பாம்பியோ
மைக் பாம்பியோ

By

Published : Oct 30, 2020, 3:58 PM IST

யூதர்கள், கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் ஆகிய மூவருக்கு ஜெருசலேம் பகுதி முக்கிய புனிதத் தலமாகக் கருதப்படுகிறது. தற்போது இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தப் பகுதிக்கு பாலஸ்தீனியர்களும் நீண்ட காலமாக உரிமை கோரி வருகின்றனர்.

உலக நாடுகளின் அங்கீகாரத்தை இஸ்ரேல் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகிறது. இந்நிலையில், 2017ஆம் ஆண்டு டிசம்பரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அறிவிப்பு வெளியிட்டார்.

இந்த அறிவிப்புக்கு பல்வேறு இஸ்லாமிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து மற்றொரு முக்கிய அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. அமெரிக்க குடிமக்கள் ஜெருசலேமில் பிறந்திருந்தால், தங்கள் கடவுச்சீட்டில் பிறப்பிட்டத்தை ஜெருசலேம் அல்லது இஸ்ரேல் என எப்படி வேண்டுமானாலும் குறிப்பிட்டுக்கொள்ளலாம் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

மேலும், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்கள் இடையே அமெரிக்கா அமைதியை விரும்பவதாக மைக் பாம்பியோ கூறியுள்ளார்.

இதையும் படிங்க:ஆதரவைக் கோரும் 'மக்கள் கூட்டணிக்கான குப்கர் ஒப்பந்தம்'

ABOUT THE AUTHOR

...view details