தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அமெரிக்கா-சீனா முதல்கட்ட வர்த்தக ஒப்பந்தம் தயார் - ட்ரம்ப் - america china reach phase on trade deal

வாஷிங்டன் : சீனாவுடன் அமெரிக்கா முதல்கட்ட வர்த்தக ஒப்பந்தம் எட்டியுள்ளதாக அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

china america phase one trade deal ready , அமெரிக்கா சீனா முதல்கட்ட வர்த்தகப் பேச்சுவார்த்தை
china america phase one trade deal ready

By

Published : Dec 14, 2019, 3:12 PM IST

அமெரிக்கா-சீனா இடையே கடந்த ஓராண்டாக வர்த்தகப் போர் நிலவிவருகிறது. இது உலக பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வர்த்தகப்போரை நிறுத்துவது தொடர்பாக கடந்தாண்டு நவம்பர் மாதம்முதல் இருநாட்டு பிரதிநிகளும் பலகட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்திவந்தனர்.

இந்நிலையில், இந்த பேச்சுவார்த்தையின் விளைவாக அமெரிக்கா-சீனா இடையே முதல்கட்ட வர்த்தக ஒப்பந்தம் தயார்நிலையில் உள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று ட்விட்டரில் பதிவிட்டிருந்த ட்ரம்ப், "சீனாவுடன் மிகப்பெரிய அளவில் முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் தயாராகியுள்ளது. விவசாயப் பொருட்கள், ஆற்றல், உற்பத்தி பொருட்கள் உள்ளிட்டவற்றை மிகப்பெரிய அளவில் வாங்குவதற்குத் தேவையான மாற்றங்களைக் கொண்டுவர ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

சீனப் பொருட்கள் மீதான 25 விழுக்காடு வரி தொடர்ந்து நீடிக்கும். ஆனால், டிசம்பர் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வரவிருந்து புதிய அபராத வரிகள் செயல்பாட்டுக்கு வராது.

இரண்டுகட்ட ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையில் உடனடியாகத் தொடங்கப்படும்.." எனக் கூறியுள்ளார்.

இந்த அறிவிப்பை சீன துணை வர்த்தக அமைச்சர் வாங் சௌவென் உறுதிசெய்துள்ளார். அறிவுசார் சொத்துக்களின் பாதுகாப்பு, தொழில்நுட்ப பரிமாற்றம், விவசாயப் பொருட்கள் வாங்குவது, வர்த்தகத்தை விரிவுபடுத்துவது என பல்வேறு பிரச்னைகள் இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளதாக அவர் கூறினார்.

இதையும் படிங்க : நாடாளுமன்றம் செல்கிறது ட்ரம்ப் பதவி நீக்க தீர்மானம் !

ABOUT THE AUTHOR

...view details