வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் 306 இடங்களில் ஜோ பைடனும், தற்போதைய அதிபர் ட்ரம்ப் 232 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.
அமெரிக்காவில் அதிபராவதற்கு எல்க்டோரெல் காலேஜ் அங்கீகாரமும் அவசியமானது. இதன்படி, கலிபோர்னியாவில் 55 எலக்டோரல் காலேஜ் வாக்குகளை ஜோ பைடன் பெற்றார். இதன் காரணமாக 270 தேர்தல் வாக்குகளை பெற்று அதிபர் பதவியை கைப்பற்றுவதை ஜோ பைடன் மீண்டும் உறுதிசெய்தார்.
இச்சூழலில் இதனை எதிர்த்து ட்ரம்ப் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. இதனால், அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்பது உறுதியாகியுள்ளது. ஜனவரி 20ஆம் தேதி ஜோ பைடன் பதவியேற்க இருப்பதால், தேர்தல் வெற்றியை உறுதி செய்ததற்கான சான்றிதழை வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவர் வெற்றியை உறுதி செய்வதற்கான சான்றிதழை வழங்க எந்தத் தடையும் விதிக்கப்போவதில்லை என துணை அதிபர் மைக் பென்ஸ் கூறியிருக்கிறார்.
வெள்ளை மாளிகையைச் சுற்றி குவிந்திருக்கும் டிரம்ப் ஆதரவாளர்கள் இச்சூழலில், தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை நோக்கி வந்த ட்ரம்பின் ஆதரவாளர்கள் அங்கு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை கலைந்து செல்லுமாறு காவல் துறையினர் அறிவுறுத்தியும், அவர்கள் கலைந்து செல்லாமல் அங்கேயே முழக்கங்களை எழுப்பி, வெள்ளை மாளிகைக்குள் நுழைந்தனர்.
இதனால் போராட்டகாரர்களை கலைக்க காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பெண் ஒருவர் படுகாயமடைந்தார். இதைத்தொடர்ந்து வெள்ளை மாளிகையைச் சுற்றி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு அமெரிக்க காங்கிரஸ் கட்சி கடும் கண்டனத்தை பதிவுசெய்தது.
காவல் துறையினர், டிரம்ப் ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட மோதல் இது குறித்து ஜோ பைடன் தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன். தலைநகரில் நிகழும் குழப்பத்திற்கு யாரையும் நான் காரணமாக கூறவில்லை. நாம் பார்ப்பது சட்டவிரோதத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிறிய எண்ணிக்கையிலான விரோதிகள். இது கருத்து வேறுபாடு அல்ல, இது கோளாறு. இது தேசத்துரோகத்தின் எல்லை. இப்போது அது கண்டிப்பாக முடிவடைய வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
வெள்ளை மாளிகையை சுற்றி ஆர்ப்பாட்டக்காரர்கள் இச்சம்பவம் தொடர்பாக அதிபர் ட்ரம்பிடம் பேசிய ஜோ பைடன், உடனடியாக தொலைகாட்சியில் தோன்றி ஆதரவாளர்களைக் கலைந்து செல்லும்படி கோரிக்கை விடுத்தார். இதனைத் தொடர்ந்து அதிபர் ட்ரம்ப் தனது ஆதரவாளர்களுக்காக ஒரு காணொலிப் பதிவை வெளியிட்டார்.
வெள்ளை மாளிகைக்குள் டிரம்ப் ஆதரவாளர்கள் அதில், “உங்கள் வலியை நான் அறிவேன். உங்கள் காயம் எனக்குத் தெரியும். ஆனால் நீங்கள் இப்போது வீட்டிற்குச் செல்ல வேண்டும்” என்றார். தொடர்ந்து அந்த காணொலியில், நீங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவர்கள் என்று ஆர்ப்பாட்டக்காரர்களை அழைத்தவர், நமக்கு அமைதி இருக்க வேண்டும். எனவே வீட்டிற்குச் செல்லுங்கள். நான் உங்களை நேசிக்கிறேன்” என்று கூறியிருந்தார்.
டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட காணொலி இதற்கிடையில் டொனால்ட் ட்ரம்பின் சமூக வலைதங்கள் ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்டவைகள் 12 மணி நேரம் முடக்கப்பட்டுள்ளன. இன்ஸ்டாகிராம் வலைதளம் 24 மணி நேரத்துக்கு முடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெள்ளை மாளிகையில் நடைபெற்ற வன்முறை சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, “வெள்ளை மாளிகையில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்கள் வேதனையளிக்கிறது. ஜனநாயக நாட்டில் இதுபோன்ற சட்ட விரோத போராட்டங்களுக்கு இடமளிக்கக் கூடாது. அங்கு அமைதியான முறையில் ஆட்சி மாற்றம் நடைபெறவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.