கடந்த மே மாதம் 22ஆம் தேதி, பாகிஸ்தானில் ஏ 320 பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 97 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து நடைபெற்ற விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த விமான பாதுகாப்பு ஆணையம் நடத்திய ஆய்வில், பாகிஸ்தானைச் சேர்ந்த சுமார் 141 விமானிகள் போலி லைசென்ஸ் வைத்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பாகிஸ்தானின் சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுவனமான பி.ஐ.ஏ (Pakistan International Airlines)-வை, தங்கள் நாடுகளில் இயங்க தடை விதித்தன.