அமெரிக்கா-தாலிபான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து படை விலகல் நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டது.
அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கிய கையுடன் தாலிபான்கள் ஆப்கனை கட்டுக்குள் கொண்டுவரத்தொடங்கினர். ஒவ்வொரு பிராந்தியமாக தாலிபான்கள் கைப்பற்றிவந்த நிலையில், ஆகஸ்ட் 14, 15 தேதிகளில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர்.
மீட்புப் பணியில் தீவிரம் காட்டும் அமெரிக்கா
காபூலை தாலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அதிபராக இருந்து அஷ்ரஃப் கனி நாட்டை விட்டு வெளியேறினார். அங்கு பாதுகாப்பு சூழல் மோசமடைந்த நிலையில், அங்கிருந்து வெளியேறும் முயற்சியில் ஆப்கன் வாழ் வெளிநாட்டவர்கள் முனைப்பு காட்டிவருகின்றனர்.
தாலிபான் அமெரிக்கா அமைதி ஒப்பந்தம் முக்கியமாக அங்கு வசிக்கும் அமெரிக்கர்களை நாடு கொண்டுவர மீட்பு நடவடிக்கை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது. இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கர்களை அந்நாட்டு அரசு மீட்டுள்ள நிலையில், மீதமுள்ள 15 ஆயிரம் அமெரிக்கர்களையும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் மீட்க அமெரிக்கா காலக்கெடு நிர்ணயித்துள்ளது.
நேற்று ஒரு நாளில் மட்டும் சுமார் ஆயிரத்து 700 அமெரிக்கர்களை விமானப்படை மீட்டுள்ளது. அத்துடன் அமெரிக்கர்களின் கூட்டணி நாடுகளைச் சேர்ந்த 50 ஆயிரம் பேரை மீட்கவும் அமெரிக்கா உதவி வருகிறது.
இதையும் படிங்க:சிறார்கள் கவனம் - அக்டோபரில் மூன்றாம் அலை அபாயம்?