தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஆஃப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகள் குறைப்பு...! - தலிபான்கள்

தலிபான்களுடன் செய்யப்பட்ட அமைதி ஒப்பந்தத்தின் படி ஆஃப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவத்தினரின் எண்ணிக்கை ஜூன் மாதத்திற்குள் 8 ஆயிரத்து 600ஆக குறைக்கப்படும் என அமெரிக்க பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர் ஜானத்தன் ஹோஃப்மேன் தெரிவித்துள்ளார்.

us-aims-to-reduce-number-of-troops-in-afghanistan-to-8600-in-july
us-aims-to-reduce-number-of-troops-in-afghanistan-to-8600-in-july

By

Published : May 27, 2020, 5:29 PM IST

இந்த ஆண்டு பிப்ரவரி 29ஆம் தேதி அமெரக்கா - தலிபான்கள் இடையே அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தால் ஆஃப்கானிஸ்தானில் அமைதி நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் படி, ஆஃப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க படைகளை ஆகஸ்ட் மாதத்திற்குள் திரும்பப் பெறுவோம் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறினார்.

இந்நிலையில், ஆஃப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகளின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 600ஆக குறைக்கத் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் ஜானத்தன் ஹோஃப்மேன் பேசுகையில், ''பிப்ரவரி மாதத்தில் தலிபான்களுடன் அமெரிக்கா செய்த அமைதி ஒப்பந்தத்தின் படி ஆஃப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படையினரின் எண்ணிக்கையை ஜூன் மாதத்திற்குள் 8 ஆயிரத்து 600ஆக குறைக்கவுள்ளோம்'' என்றார்.

மேலும், ஆஃப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகள் மீண்டும் குறைக்கும்போது, நிபந்தனைகளின் அடிப்படையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பும் 179 பாகிஸ்தானியர்கள்!

ABOUT THE AUTHOR

...view details