வாஷிங்டன்: மியான்மருக்குச் செல்ல வேண்டாம் என்று அமெரிக்கா தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளதுடன், அந்நாட்டுக்கான பயண ஆலோசனையை 4 ஆம் நிலைக்கு குறைத்துள்ளது.
இந்த முடிவு செவ்வாய்க்கிழமை நடந்த ஒரு ஆலோசனையில் எடுக்கப்பட்டது. அப்போது, “மியான்மரில் உள்ள அமெரிக்க ஊழியர்கள் (அவசரக்கால ஊழியர்கள் அல்லாதோர்) வெளியேற வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “மியான்மரில் நடைபெறும் உள்நாட்டு கலவரம், ராணுவ ஆட்சி மற்றும் கோவிட் பரவல் அதிகரித்து காணப்படுகிறது. அரசு அலுவலர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. இவை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.