தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

24 மணி நேரத்தில் 1,237 கரோனா உயிரிழப்புகள் - அமெரிக்காவில் கரோனா

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கரோனா வைரஸ் பாதிப்பால் 1,237 பேர் உயிரிழந்ததாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

us-adds-1237-coronavirus-deaths-in-24-hours
us-adds-1237-coronavirus-deaths-in-24-hours

By

Published : May 17, 2020, 1:02 PM IST

இதுகுறித்து ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், கடந்த 24 மணி நேர கணக்கெடுப்பின்படி, அமெரிக்காவில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 1,237 பேர் உயிரிழந்துள்ளனர். 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மொத்த உயிரிழப்புகள் 90 ஆயிரத்தை கடந்துவிட்டன. கடந்த சில நாள்களில் மட்டும் புதிதாக 24 ஆயிரம் பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது.

மேலும் உலகம் முழுவதும் கரோனா வைரஸால் 47 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புகள் 3 லட்சத்தை கடந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சீனாவைக் கட்டம் கட்டும் அமெரிக்கா - 18 புள்ளி செயல்திட்டம் ரெடி!

ABOUT THE AUTHOR

...view details