தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

விண்வெளியில் அத்துமீறும் ரஷ்யா - அமெரிக்கா குற்றச்சாட்டு

வாஷிங்டன்: அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை அச்சுறுத்தும் விதமாக விண்வெளியில் ரஷ்யா அத்துமீறி வருவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.

US
US

By

Published : Jul 24, 2020, 11:03 AM IST

விண்வெளியில் உள்ள செயற்கைகோள்களை தாக்கும் விதமான ஆயுதங்களை ரஷ்யா பரிசோதனை செய்ததாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. அமெரிக்காவின் விண்வெளி பாதுகாப்புத்துறையின் கமாண்டர் ஜான் ரேமண்ட் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ளார்.

அதில், அமெரிக்க அரசின் செயற்கைக்கோளுக்கு அருகே, செயற்கைக் கோளை அழிக்கும் விதமான ஆயுதங்களை ரஷ்யா பரிசோதனை செய்துள்ளது. இது போன்ற பரிசோதனை ஆபத்தானது. இது போன்ற சோதனை முயற்சியில் ஈடுபடுவதன் மூலம் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளை அச்சுறுத்தும் செயலில் ரஷ்யா ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

அமெரிக்காவின் இதே குற்றச்சாட்டை பிரிட்டனின் விண்வெளி இயக்குநரக தலைவர் ஜூலை 15ஆம் தேதி தெரிவித்தார். மேலும், விண்வெளி ஆயுத சோதனை மூலம் ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் தங்களுக்கு அச்சுறுத்தலைத் தருவதாக அமெரிக்காவின் தலைமை பாதுகாப்பு அமைப்பாகக் கருதப்படும் பென்டகன் கடந்த மாதம் தெரிவித்திருந்தது.

இதையும் படிங்க:அசாம் வெள்ளம்: இரங்கல் தெரிவித்த ரஷ்ய அதிபர்

ABOUT THE AUTHOR

...view details