தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

எங்கள் போர்க்கப்பல்களை ஈரான் துன்புறுத்துகிறது... அமெரிக்கா குற்றச்சாட்டு!

வாஷிங்டன்: குவைத்தின் பார்சீக வளைகுடா பகுதியில் சென்ற எங்களின் போர்க்கப்பல்களை ஈரானின் 11 கப்பல்படை கப்பல்கள் துன்புறுத்தியதாக அமெரிக்க அலுவலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

us-accuses-iran-of-dangerous-harassment-of-us-warships
us-accuses-iran-of-dangerous-harassment-of-us-warships

By

Published : Apr 16, 2020, 3:06 PM IST

அமெரிக்க கடலோர காவல்படைக்குச் சொந்தமான ராணுவதளம், ஹவாய் தீவின் மாவ் என்ற பகுதியில் அமைந்துள்ளது. அந்த தளத்திலிருந்து அமெரிக்க ராணுவத்திற்கு சொந்தமான யுஎஸ்எஸ் பவுல் ஹாமில்டன், டெஸ்ட்ராயர், யுஎஸ்எஸ் லூவிஸ் பி.புல்லர் உள்ளிட்ட கப்பல்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், குவைத்தின் பாரசீக வளைகுடா பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்ட அமெரிக்க கப்பலை துன்புறுத்தும் விதமாக ஈரான் போர்க்கப்பல்கள் ஈடுபட்டு வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க அலுவலர்கள் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ''அமெரிக்க போர்க்கப்பல் பாரசீக வளைகுடா பகுதிகளில் கண்காணித்திருந்தபோது, ஈரானைச் சேர்ந்த 11 போர்க்கப்பல்கள் எங்களின் கப்பலை துன்புறுத்தியது. அதில் ஒரு போர்க்கப்பல் 10 மீட்டர் இடைவெளியில் கடந்துசென்றது.

ஆபத்தான மற்றும் தவறான கணக்கீட்டின் கீழ் ஈரான் கப்பல்கள் செயல்படுகின்றன. இது சர்வதேச சட்டத்தை மீறுவது போல் உள்ளது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details