நியூயார்க் : அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புரோன்ஸ் டுவின் பார்க் குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 9 குழந்தைகள் உள்பட 19 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
இந்தக் கோரச் சம்பவம் குறித்து நகர மேயரின் மூத்த ஆலோசகர் ஸ்டீபன் ஆடம்ஸ் கூறுகையில் “ஞாயிற்றுக்கிழமை விபத்து நிகழ்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டுவருகின்றன.
13 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் 9 பேர் குழந்தைகள் ஆவார்கள். மொத்தம் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.