அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றன. இதனைக் கட்டுக்குள் கொண்டுவர காவல் துறையினர் பல்வேறு வகையில் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், நியூ ஜெர்சி மாகாணத்தின் டெரன்டான் நகரில் செயல்பட்டுவரும் நட்சத்திர விடுதி ஒன்றின் வெளியே அடையாளம் தெரியாத நபர்கள் பொதுமக்களை குறிவைத்து சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு - 10 பேர் படுகாயம்! - bar
வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் நட்சத்திர விடுதி ஒன்றின் அருகே நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் படுகாயமடைந்தனர்.
10 பேர் படுகாயம்
இதில், ஐந்து பெண், ஐந்து ஆண் என மொத்தம் 10 பேர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள டெரன்டான் காவல் துறையினர், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர்களை தீவிரமாக தேடிவருகின்றனர்.
ஓராண்டுக்கு முன் டெரன்டான் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதோடு, 22 பேர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.