திருவிழாக்கள் நடத்தப்படாத இன்றைய கரோனா காலகட்டத்தில் அமெரிக்காவில் ரத யாத்திரை நடத்தப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதுகுறித்து விசாரிக்கையில், அந்த ஃபேஸ்புக் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவிட்டது இஸ்கான் அமைப்பு எனத் தெரிய வந்தது.
அந்த அமைப்பின் மூலம் பால்டிமோர் பகுதியில் அக்.10ஆம் தேதி ரத யாத்திரை கொண்டாடப்பட்டுள்ளது. இந்தத் திருவிழா ஏற்கெனவே ஜூன் மாதத்தில் கொண்டாடிய நிலையில், மீண்டும் கொண்டாடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அந்த வீடியோவில், ஆடம்பர காரில் ஜெகன்நாத் பக்தர்களான இஸ்கான் பக்தர்கள் ரத யாத்திரையை மேற்கொண்டுள்ளனர். இதில் இந்தியர்களுடன் இணைந்து பல அமெரிக்க மக்களும் கலந்துகொண்டுள்ளனர். மேலும் அந்த காரின் முன்பகுதியில் இந்திய தேசியக் கொடியும் இடம்பெற்றுள்ளது.