அமெரிக்காவின் ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர் பெர்னி சாண்டர்ஸ். இவர் 1991ஆம் ஆண்டு முதல் அமெரிக்க நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருக்கிறார். இந்தாண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட ஜோ பிடனுடன் களத்திலிருந்தார்.
இருப்பினும், முதன்மைத் தேர்தல்களில் ஜோ பிடனுக்கு ஆதரவு பெருகியது. இதனால் பெர்னி சாண்டர்ஸ் அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து விலகினார். மேலும், அமெரிக்க அதிபர் ட்ரம்பை வீழ்த்த ஜோ பிடனுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் தனது ஆதரவாளர்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் வாஷிங்டன் போஸ்ட் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெர்னி சாண்டர்ஸ் பங்கேற்றார். அப்போது அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவீர்களா என்று பெர்னி சாண்டர்ஸிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "அதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. என்னைப் போல மற்றொரு முற்போக்கு சிந்தனையுடைய ஒருவரை அடுத்த முறை நீங்கள் காண்பீர்கள். மீண்டும் அதிபர் தேர்தலுக்கு நான் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே நான் கருதுகிறேன்.