பொலிவியா நாட்டில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் தொடங்கியதிலிருந்து அரசுத் துறைகளைச் சேர்ந்த பலரும் போராடும் மக்களுடன் சேர்ந்து தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்துவந்தனர். இது ஆளும் அரசுக்கு பெரும் நெருக்கடியை உருவாக்கியது.
இதனைத் தொடர்ந்து அதிபரும் துணை அதிபரும் நேற்று பதவி விலகிய நிலையில் (நவம்பர் 10, 2019), பொலிவியாவில் நிலவும் அமைதியற்ற சூழல் குறித்து ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
அன்டோனியோ குட்டரெஸின் கருத்து குறித்து பேசிய ஐநா செய்தித்தொடர்பாளர், “பொலிவியா நாட்டில் தற்போது நெருக்கடிக்கு உள்ளான அடிப்படை மனித உரிமை கொள்கைகள் அமைதியான தீர்வை எட்டுவதற்கு வெளிப்படையான, நம்பகமான தேர்தல் நடத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பெயிண்டருக்கு அடித்த ஜாக்பாட்! லாட்டரியில் இரண்டரை கோடி பரிசு!
தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் அக்டோபர் மாதம் 20ஆம் தேதி அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், தற்போதைய அதிபராக இருக்கும் இவோ மோரல்ஸ் (சோசலிச இயக்கம்), முன்னாள் அதிபரும் புரட்சிகர இடதுசாரி தலைவருமான கார்லஸ் மெசா ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிலவியது. இந்தத் தேர்தலில் மொத்தம் 88.31 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.