தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

புத்தாண்டு தினத்தன்று பிறந்த குழந்தைகள் குறித்து யுனிசெப் அமைப்பு தகவல்

புத்தாண்டு தினத்தன்று பிறந்த குழந்தைகள் குறித்த தகவலை குழந்தைகளுக்கான யுனிசெப் அமைப்பு வெளியிட்டுள்ளது.

New Year’s Babies
New Year’s Babies

By

Published : Jan 2, 2021, 3:55 PM IST

வாஷிங்டன்:உலகளவில், புத்தாண்டு தினத்தன்று மட்டும் 3 லட்சத்து 71 ஆயிரத்து 504 குழந்தைகள் பிறந்துள்ளதாக, யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. 2021ஆம் ஆண்டின் முதல் குழந்தை பிஜி நாட்டிலும், கடைசி குழந்தை அமெரிக்காவிலும் பிறந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்தியாவில் 59 ஆயிரத்து 995 குழந்தைகள், சீனாவில் 35 ஆயிரத்து 615 குழந்தைகள், நைஜீரியாவில் 21 ஆயிரத்து 439 குழந்தைகள், பாகிஸ்தானில் 14 ஆயிரத்து 161 குழந்தைகள், இந்தோனேசியாவில் 12 ஆயிரத்து 336 குழந்தைகள், எத்தியோப்பியாவில் 12 ஆயிரத்து 6 குழந்தைகள், அமெரிக்காவில் 10 ஆயிரத்து 312 குழந்தைகள், எகிப்தில் 9 ஆயிரத்து 236 ஆயிரம் குழந்தைகள், வங்க தேசத்தில் 9 ஆயிரத்து 236 குழந்தைகள், காங்கோவில் 8 ஆயிரத்து 640 குழந்தைகள் பிறந்துள்ளதாக, யுனிசெப் அளித்துள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டு மட்டும் உலக அளவில் 14 கோடி குழந்தைகள் பிறக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய யுனிசெப்பின் செயல் அலுவலர் ஹென்ரீட்டா ஃபோர் கூறுகையில், "இன்று நாம் உருவாக்கும் உலகமானது தற்போது பிறந்துள்ள குழந்தைகளுக்கான உலகம். ஆதலால், அக்குழந்தைகளுக்கான பாதுகாப்பான, ஆரோக்கியமான உலகத்தை நாம் உருவாக்குவோம்.

கரோனா பரவல், பொருளாதார நெருக்கடி, வறுமை ஆகியவைகளுக்கு இடையே யுனிசெப்பின் பங்கு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகமாக தேவைப்படுகிறது. இந்த ஆண்டுடன் யுனிசெப் 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. குழந்தைகளை பாதுகாப்பதிலும், அவர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதிலும் யுனிசெப் தொடர்ந்து சிறப்பாக செயல்படும்" என்றார்.

இதையும் படிங்க:புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது 18 பேர் கொலை!

ABOUT THE AUTHOR

...view details