தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஐநா தலைமையகத்தை படிப்படியாகத் திறக்க திட்டம்! - ஐநா தலைமையகம் மீண்டும் திறப்பு

நியூயார்க் : கரோனா பெருந்தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள ஐநா தலைமையகத்தை, மூன்று கட்டங்களில் படிப்படியாகத் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

UN HQ
UN HQ

By

Published : Jun 9, 2020, 10:55 AM IST

கரோனா பெருந்தொற்று காரணமாக அமெரிக்காவில் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து, நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐநா தலைமையகம் மூடப்பட்டது.

இந்நிலையில், நேற்று (திங்கள்) நியூயார்க்கில் முதல்கட்டமாக ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால், ஐநா தலைமையகம் மூன்று கட்டங்களில் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்ப ஆயத்தமாகி வருகிறது.

ஐநாவில் பணிபுரியும் அலுவலர்கள், வெளிநாட்டுத் தூதர்கள், ஊழியர்களின் பாதுகாப்புக்கே முன்னுரிமை கொடுக்கப்படும் என ஐநா ஆப்ரேஷனல் சப்போர்ட்டுக்கான துணை செயலர் அதுல் காரே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இணையத்தில் செய்தி வெளியிட்டிருந்த ஐநா குளோபல் கம்யூனிகேஷன்ஸ் டிப்பார்ட்மென்ட், "முதல்கட்டத்தில், குறிப்பிட்ட ஐநா ஆர்வலர்கள் மட்டுமே தலைமையகத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர். நியூயார்க் ஆளுநரின் ஊரடங்கு நீட்டிப்பு உத்தரவு காலம் முடியும் வரை இது நீடிக்கும்.

முதல்கட்ட தளர்வின்போது ஒரு நாளைக்கு 400 பேர் தலைமையகத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படுவர். இரண்டாம் கட்டத்தின் போது ஒரு நாளைக்கு ஆயிரத்து 100 பேர் அனுமதிக்கப்படுவர்.

ஐநா தலைமையகத்துக்கு வருவோர் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். முதல் இரண்டு கட்டங்களில், நேர்முக கூட்டங்களுக்கு அனுமதி கிடையாது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நியூயார்க்கில் ஊரடங்கு தளர்த்தப்படுவதை ஜூன் 13ஆம் தேதி வரை ஒத்திவைத்து அம்மாகாண ஆளுநர் ஆணை பிறப்பித்துள்ளார்.

நியூயார்க்கில் இதுவரை இரண்டு லட்சத்து 11 ஆயிரத்து 728 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 ஆயிரத்து 323 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க : குழந்தைகளின் உயிரோடு விளையாடினால், அதற்கு பழனிசாமியே பொறுப்பு - உதயநிதி

ABOUT THE AUTHOR

...view details