சாத்தான்குளம் மரணம் தொடர்பாக தெளிவான விசாரணை நடத்தி, குற்றமிழைத்த அனைவரும் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும் என ஐ.நா.சபை விரும்புவதாக ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் 19ஆம் தேதி வணிகர்களான தந்தை - மகன் காவல் துறையினர் பாதுகாப்பில் கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சிபிசிஐடி மிரட்டலால் சாத்தான்குளம் தொடர்பான வீடியோவை நீக்கிய சுசித்ரா!
இந்தியாவில் காவல் துறையினரின் பொறுப்புணர்வை உறுதிப்படுத்த மனித உரிமைகள் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மனித உரிமைகள் கண்காணிப்பக தெற்காசிய இயக்குநர் மீனாட்சி கங்குலி கூறுகையில், "ஜார்ஜ் ஃபிளாய்ட் கொல்லப்பட்டதற்கு உலகம் முழுவதிலும் இருந்து பலத்த எதிர்ப்புகள் கிளம்பியது கவனிக்கத்தக்கது. அதேபோல் தான் இச்சம்பவமும். இந்தியாவில் காவல் துறையினரின் பொறுப்புகளையும், பொறுப்புணர்வுகளையும் உறுதிப்படுத்த உயர் மட்ட அலுவலர்கள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
மினியாபோலிஸில் காவல் துறையினரால் ஃப்ளாய்ட் கொல்லப்பட்டது அமெரிக்காவில் ஒரு நாடு தழுவிய போராட்டத்தைத் தூண்டியது. இச்சம்பவம் சிறுபான்மையினருக்கு எதிராக காவல் துறையினர் காட்டிய மிருகத்தன்மையைக் காட்டியது. உலகளவில் காவல் துறையினரின் செயல்பாடுகளால் போராட்டங்கள் வெடித்து வருகின்றன. அவர்கள் கையில் இருக்கும் தண்டனையின் அளவுகோல்களை களைய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் மேலும் ஒருவர் இறந்த விவகாரம்: உள்துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவு..!
சாத்தான்குளம் மரணம் தொடர்பான வழக்கை முன்னிறுத்தி கங்குலி பேசியபோது, "பல நீதிமன்ற உத்தரவுகளும், கைது நடவடிக்கைகளும் இருந்தபோதிலும், தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்த இரண்டு மரணங்கள் தொடர்புடைய காவல் துறையினர் தண்டிக்கப்படும் பட்சத்தில், பிறருக்கு அது ஒரு தக்க பாடமாக அமையும்” என்று கூறினார்.