நியூயார்க்:சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், எகிப்து போன்ற நாடுகள் கத்தார் நாட்டின் மீது அரசு ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் 2017ஆம் ஆண்டுமுதல் தடைவிதித்துள்ளன. வளைகுடா நாடு பயங்கரவாதத்தை ஆதரிப்பது மட்டுமின்றி, அவர்களது உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாக குற்றம் சாட்டிய அவர்கள், நாடுகளுக்கிடையேயான உறவுகளைப் புதுப்பிக்க கத்தார் சில கோரிக்கைகளை செயல்படுத்த வேண்டிய அவசியம் எனத் தெரிவித்துள்ளன. மேலும் கத்தார் நாடு பின்பற்ற வேண்டியவை குறித்த பட்டியலையும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கிடையில், வளைகுடா பிராந்தியத்தில் பதற்றத்தைத் தணிக்க குவைத் மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வரவேற்பு தெரிவித்து பாராட்டினார்.