கரோனா வைரஸ் பாதிப்பு உலகையே அச்சுறுத்திவருகிறது. இந்த வைரசிற்கு இதுவரை 3.30 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நேற்று நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் பேசிய ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், ''கரோனா வைரசின் வீரியம், போர் என்ற பெயரில் நடக்கும் முட்டாள்தனத்தை வெளிக்காட்டுகிறது. இதனால்தான் இன்று உலகம் முழுவதும் போரை விட்டுவிட்டு அனைவரும் வாழ்விற்கான உண்மையான போராட்டத்தில் கவனம் செலுத்த வேண்டுகோள்விடுக்கிறேன்.
துப்பாக்கிகளையும், பீரங்கிகளையும், வான்வழித் தாக்குதல்களையும் முடிவுக்கு கொண்டுவர வேண்டிய நேரமிது. போர் என்னும் வியாதியை நிறுத்திவிட்டு, உலகை அழித்துக்கொண்டிருக்கும் வைரசை எதிர்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளிப்பட்டிருக்கிறோம்.