ஐநா சபையின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவிக்கையில், "உலகம் முழுவதும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை இந்தாண்டு புதிய உயர்வை எட்டியுள்ளது.
இதனை சர்வதேச கண்காணிப்புக் குழுவின் அறிக்கை உறுதிப்படுத்தி உள்ளது. அதன்படி இந்தாண்டு உலகளவில் 274 பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சீனா, துருக்கி, எகிப்து, சவுதி அரேபியா, பெலாரஸ், எத்தியோப்பியா நாடுகளில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.