கோவிட்-19 தொற்று காரணமாக பல்வேறு நிறுவனங்களும் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துவருகின்றன. குறிப்பாக, அமெரிக்க நிறுவனங்கள் நிதி நெருக்கடியைச் சமாளிக்க ஊழியர்களை வேலையைவிட்டு நீக்குவது, கட்டாய விடுப்பு அளிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டுள்ளன.
அந்த வகையில் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஊபர் நிறுவனம் தன் நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 14 விழுக்காடு பணியாளர்களை, அதாவது 3,700 பேரை ஒரே நாளில் வேலையைவிட்டு நீக்கியுள்ளது. ஜூம் வீடியோ கால் மூலம் பணியாளர்களைத் தொடர்பு கொண்டு இத்தகவலைத் தெரிவித்துள்ளனர்.
சுமார் மூன்று நிமிடம் நீடித்த இந்த வீடியோ காலில் பணியாளர்களிடம் 'இதுதான் ஊபர் நிறுவனத்தில் உங்களின் கடைசி நாள்' என்று கூறி வேலையைவிட்டு தூக்கியுள்ளது.