தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கைமாறும் ட்விட்டர் அக்கவுண்ட்!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடனிடம் அடுத்தாண்டு ஜனவரி 20ஆம் தேதி ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோ பைடன்
ஜோ பைடன்

By

Published : Nov 21, 2020, 4:53 PM IST

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடனிடம், அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு (@POTUS) ஜனவரி 20ஆம் தேதி ஒப்படைக்கப்படும் என ட்விட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது. தற்போதைய அதிபர் ட்ரம்ப் தோல்வியை மறுத்துவரும் நிலையில், ட்விட்டர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. @POTUS கணக்கை 32.8 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள்.

ட்ரம்ப் சார்பாக பதிவிடப்பட்ட பதிவுகள் நீக்கப்பட்ட பின்பு, ட்விட்டர் அக்கவுண்ட் பைடனிடம் ஒப்படைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்ரம்பின் பதிவுகள் நீக்கப்படுவதற்கு முன்பு, அது காப்பகப்படுத்தப்படும் எனவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து ட்விட்டர் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "அமெரிக்க துணை அதிபர், முதல் பெண்மணி, வெள்ளை மாளிகை உள்ளிட்ட ட்விட்டர் கணக்குகளும் ஜனவரி 20ஆம் தேதியே ஒப்படைக்கப்படும். தேசிய ஆவணக்காப்பகம், பதிவுகள் நிர்வாகத்தின் ஆலோசனைப்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

பைடன் - கமலா ஹாரிஸ் குழுவினரை ட்விட்டர் பிரதிநிதிகள் விரைவில் சந்தித்து, அரசின் அதிகாரப்பூர்வ அக்கவுண்டுகளை எப்படி நிர்வகிப்பது என்பது குறித்து ஆலோசிக்கவுள்ளனர். நவம்பர் 3ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில், 306 எலக்டோரல் வாக்குகளை பெற்று பைடன் வெற்றிபெற்றார். ஆனால், தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் வாக்குப்பதிவில் முறைகேடு நடைபெற்றதாக ட்ரம்ப் தொடர் குற்றச்சாட்டுகளை சுமத்திவருகிறார்.

ABOUT THE AUTHOR

...view details