டெல்லி: ட்விட்டர் நிறுவனத்தில் பணிப்புரியம் மொத்த ஊழியர்களில் 42.6 சதவிகிதம் பேர் பெண்கள் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக, தலைமைப் பொறுப்புகளில் இருப்பவர்களில் 38.2 சதவிகிதம் பேர் பெண்கள் என்றும், அதேபோல் தொழிநுட்ப பொறுப்புகளில் இருப்பவர்களில் 25.8 சதவிகிதம் பேர் பெண்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலின சமத்துவம், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் 2025ஆம் ஆண்டுக்குள் ட்விட்டர் நிறுவனத்தில் பணிப்புரியம் பெண் ஊழியர்களின் எண்ணிக்கையை 50 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என அந்நிறுவனம் இலக்கு நிர்ணயித்திருந்தது. அந்த பாதையில், தற்போது பெண் ஊழியர்களின் எண்ணிக்கை 42 சதவிதிதமாக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு நிறுவனத்தின் தொழிலாளர் பிரதிநிதித்துவ இலக்கு நோக்கிய செயல்பாடுகளை செய்யும் விதமாக, ரியல் டைம் டேட்டா டிராக்கிங் டேஷ்போர்டினை உருவாக்கியது.