தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ட்விட்டர் சேவை முடக்கம்? - ட்விட்டர் சேவை முடக்கம்

வாஷிங்டன் : ட்விட்டர் சேவை ஒரு மணி நேரமாக முடங்கியதாக பயனாளர்கள் புகார் தெரிவித்த நிலையில், அது சரி செய்யப்பட்டுவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

ட்விட்டர்
ட்விட்டர்

By

Published : Oct 16, 2020, 2:01 PM IST

சமூக வலைதளமான ட்விட்டர் இன்று (அக்.16) காலை சுமார் ஒரு மணி நேரம் வரை முடங்கியதாகக் கூறப்படுகிறது. காலை 5:15 மணி முதல் 6:30 மணி வரை சுமார் ஒரு மணி நேரம் உலகம் முழுவதும் ட்விட்டர் பயனாளர்களால் பதிவிடமுடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்தப் பிரச்னை காலை ஏழு மணியளவிலேயே சரி செய்யப்பட்டுவிட்டதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், ”ட்விட்டர் முடக்கம் குறித்து 50,000க்கும் மேற்பட்ட புகார்கள் இதுவரை வந்துள்ளன. ட்விட்டரை யாரும் ஹேக் செய்யவில்லை, அதன் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை” என ட்விட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இந்த முடக்கம் குறித்த விசாரணையை ட்விட்டர் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

கடந்த ஜூலை மாதம், அமெரிக்க அதிபர் வேட்பாளரான ஜே பிடன், டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் எலான் மஸ்க், மைக்ரோசாப்ட் நிறுவனரான பில்கேட்ஸ் ஆகியோரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கரோனாவை இந்தியாவைவிட பாகிஸ்தான் சிறப்பாகக் கையாண்டுள்ளது - ராகுல் காந்தி

ABOUT THE AUTHOR

...view details