தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

டொனால்ட் ட்ரம்ப் மகன் பேரோனுக்கு கரோனா உறுதி - அமெரிக்காவில் சுமார் 78 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மகன் பேரோன் ட்ரம்புக்கு கரோனா பாதிப்பு உறுதியானதாக அவரது தாயார் மெலெனியா தெரிவித்துள்ளார்.

Barron Trump
Barron Trump

By

Published : Oct 15, 2020, 11:45 AM IST

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அவரது மனைவி மெலெனியா ட்ரம்பிற்கு அண்மையில் கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து டொனால்ட் ட்ரம்பிற்கு அந்நாட்டு ராணுவ மருத்துவமனையில் நான்கு நாள்கள் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவர் உடல் நலம் தேறி தொற்றிலிருந்து மீண்டதை அடுத்து மீண்டும் தேர்தல் பணிகளில் தீவிரமாகக் களமிறங்கியுள்ளார்.

இந்நிலையில், அவரது 14 வயது மகன் பேரோன் ட்ரம்புக்கு தற்போது கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவரது தாயார் மெலெனியா ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தனது வலைதளப் பக்கத்தில் இதைத் தெரிவித்த மெலெனியா, பேரோனுக்கு நோய் அறிகுறி எதுவும் தென்படவில்லை எனவும், இளம் வயதான பேரோன் இந்தப் பாதிப்பிலிருந்து விரைவாக குணமடைவார் எனவும் கூறியுள்ளார்.

இந்த நோயை எதிர்கொள்ள அனைவருக்கும் மனவலிமை மிகவும் முக்கியம் எனத் தெரிவித்த மெலெனியா, அமெரிக்காவின் திறன்படைத்த மருத்துவர்கள் தங்களின் கடும் உழைப்பின் காரணமாக நாட்டில் கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

அமெரிக்காவில் சுமார் 78 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 2.16 லட்சம் பேர் இதுவரை பாதிப்பின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க:எங்கே இருக்கிறார் அதிபர் ட்ரம்பின் மனைவி?`

ABOUT THE AUTHOR

...view details