தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பதிப்புரிமை பிரச்னை... ட்ரம்பின் ட்வீட்டை நீக்கிய ட்விட்டர்! - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் ரீ ட்வீட் செய்த பதிவை, பதிப்புரிமை பிரச்னையை மேற்கொள் காட்டி ட்விட்டர் நிர்வாகம் நீக்கியுள்ளது.

trump
trump

By

Published : Jul 19, 2020, 11:35 PM IST

உலகளவில் பிரபலமான ட்விட்டர் நிர்வாகம், சர்ச்சைக்குளான பதிவுகளை யாரேனும் பதிவிட்டால் உடனடியாக நீக்கிவடும். அந்த வகையில், ட்விட்டர் நிர்வாகம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் ட்விட்டர் பதிவை நீக்கியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், லிங்கின் பார்க் குழுவின் இசையுடன் கூடிய பரப்புரை பாணி வீடியோ ஒன்றை மறு ட்வீட் செய்திருந்தார். ஆனால், ட்விட்டர் நிர்வாகம், இந்தப் பதிவிற்கு பதிப்புரிமை பிரச்னை உள்ள காரணத்தால் நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை ட்ரம்ப் வெள்ளை மாளிகையின் சமூக ஊடக இயக்குனர் டான் ஸ்காவினோவிடம் மறு ட்வீட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்தின் பதிப்புரிமை உரிமையை ஸ்கேவினோ நிறுவனத்திடம் உள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக வெள்ளை மாளிகைக்கு ட்விட்டர் பிரதிநிதியிடமிருந்து வந்த மின்னஞ்சலில், "பதிப்புரிமை உரிமையாளர் அல்லது அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் எங்களுக்கு அனுப்பிய புகாரின் பேரிலேயே நடவடிக்கைகள் எடுக்கிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு வெள்ளை மாளிகை தரப்பில் பதில் எதுவும் உடனடியாக அனுப்பவில்லை.

முன்னதாக, அதிபர் ட்ரம்பின் இரண்டு ட்வீட்களுக்கு, ட்விட்டர் நிர்வாகம் உண்மையை சரிபார்த்து பதிவிட வேண்டும் என எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details