அமெரிக்காவின் முன்னணி பத்திரிகையான, “தி நியூயார்க் டைம்ஸ்” நாளிதழ் வெள்ளிக்கிழமை வெளியிட்டிருந்த செய்தியில், “ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில், தலிபான்களுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே ரகசிய ஒப்பந்தம் உள்ளது” என குற்றஞ்சாட்டி அறிக்கை ஒன்று ட்ரம்புக்கு அளிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவித்திருந்தது.
இந்தச் செய்தி அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ஒருபோதும் விளக்கம் அளிக்கப்படவில்லை என்று ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை மறுத்துள்ளார்.
துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் மற்றும் தலைமைத் தளபதி மார்க் மெடோஸ் ஆகியோருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்த தகவல்கள் வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். மேலும் அந்த நாளேடு போலி செய்திகளை பரப்பியுள்ளது என்றும் ட்ரம்ப் கூறினார்.