மக்களின் மனதில் பிரிவினைவாதம் தூண்டப்பட்ட நிலையில், அடுத்தாண்டு நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி, குடியரசு கட்சி ஆகியவைக்கு இடையே கடும் போட்டி நிலவிவருகிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்பை பதவி நீக்கம் செய்வதற்கு பெரும்பான்மையினரின் ஆதரவு இருந்தபோதிலும், அது மாறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
2020ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் முக்கிய வேட்பாளராக பார்க்கப்படுபவர் ஜோ பைடன். இவரை மடக்குவதற்கு அமெரிக்க அதிபர் டர்ம்ப், உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கிக்கு அழுத்தம் கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தனது அதிகாரத்தை ட்ரம்ப் எவ்வாறு தவறாகப் பயன்படுத்தி பைடனை சிக்க வைக்க முயற்சித்தார் என்பது பதவி நீக்க விசாரணையில் தெரியவரவுள்ளது.
அமெரிக்காவின் துணை அதிபராக ஜோ பைடன் இருந்தபோது, உக்ரைன் நாட்டின் இயற்கை எரிவாயு நிறுவனத்தின் முக்கிய பங்குதாரராக அவரின் மகன் ஹண்டர் பைடன் இருந்தார். இதுகுறித்து விசாரணை நடத்த டர்ம்ப், ஸெலென்ஸ்கிக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.
ஹண்டருக்கு எதிரான விசாரணை தொடங்காததால் அந்நாட்டுக்கு தரவிருந்த 400 மில்லியன் அமெரிக்க டாலர்களை ட்ரம்ப் தர மறுத்ததாக தகவல் வெளியானது. ரஷ்யாவிடம் இருந்து தன்னை காத்துக்கொள்ள உக்ரைன் நாட்டுக்கு அந்த நிதிதேவைப்பட்டபோதிலும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு ஒப்புதல் அளித்தபோதிலும் ட்ரமப் தர மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதில் சர்ச்சை வெடிக்க, இறுதியில் நிதி வழங்கப்பட்டது. அந்த நிதி எப்படி முடக்கப்பட்டது என ஜனநாயகக் கட்சியினர் நிரூபிக்க வேண்டும். ஆனால், மேலாண்மை அலுவலகத்தில் இருக்கும் சில அலுவலர்கள் ட்ரம்புக்கு எதிரான சாட்சியமாக மாற மறுத்துவிட்டனர். 13 சாட்சியங்கள் ஆஜராக வேண்டிய நிலையில், இருவர் மட்டுமே ஆஜரானார்கள்.
வெள்ளை மாளிகையின்முன்னாள் அலுவலர்கள் உள்ளிட்ட பல சாட்சியங்களுக்கு லஞ்சம் வழங்கப்பட்டு, அவர்களை ட்ரம்ப் தன் பக்கம் இழுத்ததாக, ஜனநாயக கட்சியினர் சாட்சியத்தோடுஅம்பலப்படுத்தினர். ட்ரம்ப், ஸெலன்ஸ்கி ஆகியோர் இடையே நடந்த சந்திப்பு குறித்த தகவல்களை தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று ஜூலை 25ஆம் தேதி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. பல அமெரிக்க அலுவலர்கள் அனுப்பிய தகவலின்படி ட்ரம்ப் தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார் என்பதை தன்னார்வு தொண்டு நிறுவனம் வெளியே கொண்டுவந்தது.
ட்ரம்பை பதவி நீக்கம் செய்வதற்கு இந்த விவகாரத்தை முன்வைக்கலமா என்ற விவாதம் பலர் இடையே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
அமெரிக்க அரசியலமைப்பின்படி, நாட்டுக்கு எதிரான துரோகம், லஞ்சம், உயர் குற்றங்கள் ஆகியவை அடிப்படையில்தான் அதிபர் பதவி நீக்கம் செய்யப்படுகிறார். ஆனால், அங்கு குறிப்பிடப்பட்டுள்ள உயர் குற்றம் என்பது எதை குறிக்கிறது என்பதற்கான சரியான தகவல் இல்லை. அந்த உயரம் குற்றம் என்ன என்பதை சமகால அரசியல்வாதிகள் கண்டறிந்து அரசியலமைப்பில் சேர்க்க வேண்டும்.