தமிழ்நாடு

tamil nadu

வைரஸ் தாக்கி அமெரிக்க அதிபரின் தாத்தா மரணம்!

By

Published : May 7, 2020, 8:28 AM IST

ஹைதராபாத்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தாத்தா வைரஸ் தாக்கி மரணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

trump grandpa spanish flu  friedrich trump spanishh flu  trump spanish flu  trump grandfather spanish flu  வைரஸ் தாக்கி டொனால்ட் ட்ரம்ப் தாத்தா மரணம்  டொனால்ட் ட்ரம்ப் தாத்தா, ஸ்பானிஷ் புழு, ஃபிரீட்ரிக் ட்ரம்ப், அமெரிக்கா, கரோனா வைரஸ்
trump grandpa spanish flu friedrich trump spanishh flu trump spanish flu trump grandfather spanish flu வைரஸ் தாக்கி டொனால்ட் ட்ரம்ப் தாத்தா மரணம் டொனால்ட் ட்ரம்ப் தாத்தா, ஸ்பானிஷ் புழு, ஃபிரீட்ரிக் ட்ரம்ப், அமெரிக்கா, கரோனா வைரஸ்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தந்தை வழி தாத்தா ஃபிரெட்ரிக் ட்ரம்ப் 1918 ஆண்டு ஸ்பானிஷ் புழு காய்ச்சல் தொற்று நோயால் மரணித்துள்ளார். ஏறக்குறைய நூறாண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவை தாக்கிய ஸ்பானிஷ் புழு காய்ச்சலால், ஆறு லட்சத்து 75 ஆயிரம் பேர் மரணம் அடைந்ததாக தகவல்கள் வாயிலாக அறிய முடிகிறது.

அமெரிக்காவில் ஸ்பானிஷ் புழு காய்ச்சல் பரவல் காரணமாக, அப்போதும் இதேபோன்று சமூக இடைவெளி கடைப்பிடிப்பு, கை, கால் கழுவுதல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. ஆனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். அவர்கள் வீடுகளின்றி தொழிற்சாலைகள் மற்றும் தெருக்களில் தங்கும் நிலை ஏற்பட்டது.

கரோனா வைரஸைப் போலவே ஸ்பானிஷ் புழு காய்ச்சலும் சுவாசப் பிரச்னையை ஏற்படுத்தக் கூடியது. உலகம் முழுக்க கரோனா வைரஸ் பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தை நெருங்கி வருகிறது. இதில், அமெரிக்காவில் மட்டும், 13 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 72 ஆயிரத்து 23 ஆக உள்ளது.

ஒட்டுமொத்தமாக கரோனா பாதிப்பால் இரண்டு லட்சத்து 58 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: அமெரிக்கா தவறிழைத்துவிட்டது - சுகாதாரத் துறை அலுவலர் பரபரப்பு குற்றச்சாட்டு!

ABOUT THE AUTHOR

...view details