அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த ட்ரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து மியாமியில் உள்ள தன்னுடைய பங்களாவுக்கு குடிபெயர்ந்துள்ளார். ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் அவரை விமர்சிக்கும் விதமாக பலர் கருத்து தெரிவித்தும் மீம்ஸ் வெளியிட்டும் வருகின்றனர்.
நீங்க ரொம்ப மோசமான அதிபர்: விமானத்தில் பறக்கவிடப்பட்ட ட்ரம்ப் குறித்த சர்ச்சை போஸ்டர்! - ட்ரம்ப் போஸ்டர்
வாஷிங்டன்: "வரலாற்றிலேயே ட்ரம்ப்தான் மோசமான அதிபர்" போன்ற வாக்கியங்கள் இடம்பெற்றிருந்த பதாகை ஃப்ளோரிடாவுக்கு சென்ற விமானத்தில் பறக்கவிடப்பட்டது.
இந்நிலையில், "வரலாற்றிலேயே ட்ரம்ப்தான் மோசமான அதிபர்" போன்ற வாக்கியங்கள் இடம்பெற்றிருந்த பதாகை ஃப்ளோரிடாவில் அமைந்துள்ள ட்ரம்ப்பின் புதிய வீட்டுக்கு அருகே சென்ற விமானத்தில் பறக்கவிடப்பட்டது. அந்த விமானம் யாருடையது, இதனை யார் செய்தது போன்ற தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.
அதுமட்டுமின்றி, 'பரிதாபமான தோல்வியை சந்தித்த ட்ரம்ப் மீண்டும் மாஸ்கோவுக்கு செல்ல வேண்டும்' போன்ற பதாகைகளும் விமானத்தில் பறக்கவிடப்பட்டது. ஜனவரி 20ஆம் தேதி நடைபெற்ற அதிபர் பதவியேற்பு விழாவில் ட்ரம்ப்பும், அவரது மனைவி மெலனியா டிரம்ப்பும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.