எகிப்து நாட்டின் பழமையான இயக்கங்களுள் ஒன்று முஸ்லிம் பிரதர்ஹுட்.
முஸ்லிம் பிரதர்ஹுட்டை தீவிரவாத இயக்கமாக அறிவிக்கவுள்ளாரா ட்ரம்ப்? - washington
வாஷிங்டன்: எகிப்த் நட்டை சேர்ந்த முஸ்லிம் பிரதர்ஹுட் இயக்கத்தை தீவிரவாத இயக்கமாக அறிவிப்பது குறித்து அமெரிக்க அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
2011 அரபு புரட்சியைத் தொடர்ந்து, எகிப்தில் முதன்முறையாக ஜனநாயக முறையில் அதிபராக பதவியேற்ற மொஹமத் மொர்சி (Mohamed Morsi) இந்த இயக்கத்தைச் சேர்ந்தவராவார். 2014 ஆம் ஆண்டு, அப்துல் அல் சிசி அதிபராகப் பதவியேற்றதைத் தொடர்ந்து, முஸ்லிம் பிரதர்ஹுட்டை தீவிரவாத இயக்கமாக அறிவித்தது எகிப்து அரசு.
இந்நிலையில், அமெரிக்க அரசு இந்த இயக்கத்தை தீவிரவாத அமைப்பாக அறிவிக்கவேண்டும் என அந்நாட்டு அதிபர் ட்ரம்பிடம், அப்துல் எல் சிசி கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி, முஸ்லிம் பிரதர்ஹுட்டை தீவிரவாத இயக்கமாக அறிவிப்பது குறித்து, அமெரிக்க அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.