தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

முதன்முறையாக மாஸ்க் அணிந்த ட்ரம்ப்... காரணம் என்ன?

வாஷிங்டன்: மருத்துவமனைக்கு பார்வையிட சென்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப், முதன்முறையாக மாஸ்க் அணிந்து சென்றுள்ளார்.

Trump
Trump

By

Published : Jul 13, 2020, 2:07 PM IST

உலகெங்கும் கரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. குறிப்பாக, உலக வல்லரசு நாடாக கருதப்படும் அமெரிக்காவில் ட்ரம்ப் அரசு, கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகளும் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் பொதுஇடங்களில் மாஸ்க்குகளை அணிய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர். இருப்பினும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மாஸ்க் அணிவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவந்தார். மாஸ்க் அணியும் செய்தியாளர்களை கிண்டல் செய்யும் விதமாகவும் அவர் சில ட்வீட்களை பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் வாஷிங்டன் புறநகர் பகுதியில் அமைந்துள்ள வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவமனைக்கு வந்திருந்தபோது முதன்முறையாக அதிபர் மாஸ்க் அணிந்திருந்தார். அங்கு காயமடைந்த ராணுவ வீரர்கள், சுகாதார பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்களை ட்ரம்ப் சந்தித்தார்.

முன்னதாக மருத்துவமனைக்கு செல்லுவதற்கு முன் செய்தியாளரிடம் பேசிய அதிபர் ட்ரம்ப், "மருத்துவமனைக்கு செல்லும்போது மாஸ்க் அணிவது முக்கியம் என்று நான் கருதுகிறேன்" என்று தெரிவித்திருந்தார்.

அதிபர் ட்ரம்ப் மருத்துவமனையில் மாஸ்க் அணிந்திருந்தபோதும், ராணுவ வீரர்களை சந்தித்துவிட்டு வெள்ளை மாளிகைக்கு திரும்பும்போது மாஸ்க்கை அணிந்திருக்கவில்லை.

முதன்முறையாக மாஸ்க் அணிந்த ட்ரம்ப்

கரோனா தொற்றிலிருந்து அமெரிக்கா மீண்டுவிட்டது என்பதை உலகிற்கு காட்ட ட்ரம்ப் பல முற்சிகளை எடுத்துவருகிறார். மேலும், தற்போது ஏற்பட்டுள்ள நிலையை பொருளாதார மந்த நிலையாக கருதி, அதை மீட்க ட்ரம்ப் அரசு நடவடிக்கைகளை எடுக்கும்போதும், இதை ஒரு சுகாதார நெருக்கடி நிலையாக அறிவிக்க ட்ரம்ப அரசு விரும்பவில்லை.

மேலும், மாஸ்க் அணிந்திருத்தால் அது தன்னை பலவீனமாகக் காட்டும் என்று அதிபர் ட்ரம்ப் கருதுவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, மாஸ்க் அணிதிருந்த ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் பலவீனமாக இருப்பதாக அதிபர் ட்ரம்ப் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ’மாஸ்க் அணியுங்கள், இல்லையென்றால் கரோனாவை கட்டுப்படுத்த முடியாது’ -வெள்ளை மாளிகை

ABOUT THE AUTHOR

...view details