தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

'அந்த இரண்டு நாள்கள் அற்புதமான தருணம்'- இந்திய பயணம் குறித்து ட்ரம்ப் - Trump was on his maiden official visit to India

வாஷிங்டன்: இந்தியாவில் இருந்த இரண்டு நாள்களும் மிக அற்புதமான தருணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறினார்.

'அந்த இரண்டு நாள்கள் அற்புதமான தருணம்'- இந்திய பயணம் குறித்து ட்ரம்ப் டொனால்ட் ட்ரம்ப் இந்தியப் பயணம், ட்ரம்ப் செய்தியாளர் சந்திப்பு, வெள்ளை மாளிகை ரோஜா தோட்டம், நமஸ்தே ட்ரம்ப், ராணுவ ஒப்பந்தம் We had a great time in India, it was an incredible two days Says Trumph Trump was on his maiden official visit to India
'அந்த இரண்டு நாள்கள் அற்புதமான தருணம்'- இந்திய பயணம் குறித்து ட்ரம்ப் டொனால்ட் ட்ரம்ப் இந்தியப் பயணம், ட்ரம்ப் செய்தியாளர் சந்திப்பு, வெள்ளை மாளிகை ரோஜா தோட்டம், நமஸ்தே ட்ரம்ப், ராணுவ ஒப்பந்தம் We had a great time in India, it was an incredible two days Says Trumph Trump was on his maiden official visit to India

By

Published : Mar 14, 2020, 1:07 PM IST

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை ரோஜா தோட்டத்தில் அந்நாட்டின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இந்திய பயணம் குறித்து அவர் கூறுகையில், “அந்த இரண்டு நாள்களும் மிக அற்புதமான தருணம். “அது மிகச்சிறந்த நேரம். அந்த இரு தினங்களும் அற்புதமான தருணமாக அமைந்தது. நரேந்திர மோடி என்னுடைய சிறந்த நண்பர். அவர் மக்களின் நண்பரும் கூட. அவருடன் இருப்பதை நான் விரும்பினேன். அனைத்து விஷயங்கள் தொடர்பாகவும் பேசினோம். எங்கள் அன்புக்கு எல்லை கிடையாது” என்றார்.

'வணக்கம் (நமஸ்தே) ட்ரம்ப்' நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த மாதம் (பிப்ரவரி) 24ஆம் தேதி குஜராத் மாநிலம் ஆமதாபாத் வந்தார். அவருடன் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப், மகள் இவாங்கா உள்ளிட்டோரும் வந்திருந்தனர். அவருக்கு இந்தியாவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அன்றைய தினம் மாலை ஆக்ரா சென்று சுற்றிப்பார்த்தார். மறுநாள் (25) டெல்லியில் குடியரசுத் தலைவர், பிரதமர், தொழிலதிபர்கள் மற்றும் அமெரிக்க அலுவலர்களை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது, அமெரிக்காவிலிருந்து 30 ராணுவ ஹெலிகாப்டர்கள் வாங்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது நினைவுக்கூரத்தக்கது.

இதையும் படிங்க:அதிபர் ட்ரம்புக்கு கொரோனா சோதனை?

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details