வடமேற்கு சிரியாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படையினரை திரும்பப் பெறுகிறோம் என்றும் விரைவில் அமெரிக்காவின் இடத்தை துருக்கிப் படையினர் நிரப்புவார்கள் என்றும் அமெரிக்க அறிவித்திருந்தது.
இதையும் படிங்கSyria: துருக்கிக்கு வழிவிடும் அமெரிக்கா...பீதியில் குர்து போராளிகள்!
இதனால், துருக்கிப் படையினர் தங்கள் மீது தாக்குதல் நடத்தலாம் என ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளை எதிர்கொள்ளும் அமெரிக்க ஆதரவுப் படையான குர்து பேராளிகள் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில், குர்து பேராளிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக ட்வீட் செய்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், "நான் முன்னர் கூறியது போலவே, வரம்பு மீறி துருக்கி அரசு செயல்பட்டால் அந்நாட்டின் பொருளாதாரத்தை உருத்தெரியாமல் அழித்துவிடுவோம்" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.