கரோனா தாக்கமானது உலகின் வல்லரசாகக் கருதப்படும் அமெரிக்காவில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 1918ஆம் ஆண்டு ஏற்பட்ட ஸ்பானிஷ் காய்ச்சல் பெருந்தொற்றை விட கரோனாவின் தாக்கம் தீவிர பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுவரை அந்நாட்டில் கரோனாவால் 6.44 லட்சம் பேர் பாதிப்பக்கபட்டுள்ள நிலையில், 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கரோனா நோய் தொற்று பரவலுக்குப்பின் இதுவரை இல்லாத அளவு அமெரிக்காவில் ஒரே நாளில் மட்டும் 2 ஆயிரத்து 600 பேர் உயிரிழந்தனர்.
வரும் நவம்பர் மாதம் தேர்தலைச் சந்திக்கும் அதிபர் ட்ரம்புக்கு இந்த கரோனா வைரஸ் தொற்று பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ட்ரம்பின் மீது ஜனநாயக கட்சியினரும், ஊடகங்களும் தொடர் விமர்சனங்களை முன்வைக்கின்றன.