சர்வதேச அளவில் தேடப்பட்ட பயங்கரவாதியும் ஐஎஸ் அமைப்பின் தலைவருமாக இருந்த அபு பக்கரை அமெரிக்கச் சிறப்புக் படை கடந்த வாரம் சுட்டுக் கொன்றது. சிரியாவில் அமெரிக்க நடத்திய தாக்குதலில் அவர் பலியானதாக அதிபர் ட்ரம்ப் அதிகாரப்பூர்மாக அறிவித்தார்.
இந்நிலையில், ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் அபு பக்கரையை கொல்லும் திட்டத்தில் முக்கியப் பங்காற்றிய நாயின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும், 'ஐஎஸ் தலைவர் அபு பக்கரை பிடித்துக் கொல்வதில் மிக முக்கியப் பங்காற்றியது இந்த நாய்' என்று ட்வீட் செய்துள்ளார்.