அமெரிக்காவில் உள்ள மினியாபோலிஸ் நகரில், காவலர் ஒருவரின் பிடியில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கறுப்பின அமெரிக்கர் உயிரிழந்த சம்பவம் அந்நாட்டையே உலுக்கிவருகிறது. குறிப்பாக, கரோனா பாதிப்பைக் கூட நீர்த்துப்போகும் விதமாக அந்நாட்டில் இந்தச் சம்பவம் பெரும் கிளர்ச்சியை உருவாக்கியுள்ளது.
அந்நாட்டில் உள்ள பெரும் நகரங்கள் அனைத்திலும் ஜார்ஜின் மறைவுக்கு நீதி கேட்டு தொடர் போராட்டத்தை மக்கள் நடத்திவருகின்றனர். இந்த போரட்டத்தின்போது ஆங்காங்கே கடும் வன்முறைச் சம்பவமும் நிகழ்ந்துவருகிறது.
இந்தப் போரட்டத்தின் தீவிரம் அந்நாட்டின் தலைநகரான வாஷிங்டனிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 2001ஆம் ஆண்டு இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பின் அமெரிக்க அதிபரின் வசிப்பிடமான வெள்ளை மாளிகை உஷார் நிலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.