கோவிட்-19 தொற்று கடந்தாண்டு இறுதியில் முதலில் சீனாவில் கண்டறியப்பட்டது. கரோனா பரவல் காரணமாக, அந்நாட்டின் பல்வேறுப் பகுதிகளில் உற்பத்தித் துறை முற்றிலும் முடங்கியது. இதனால் சீனாவில் தங்கள் தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் பெரும் சிக்கலை எதிர்கொண்டன.
ஆப்பிள் நிறுவனம், தனது தயாரிப்பு தொழிற்சாலையில் ஒரு பகுதியைச் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு மாற்றவுள்ளதாகச் சமீபத்தில் செய்தி வெளியானது. இது குறித்து பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், "இந்தச் சூழ்நிலையில் அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புத் தொழிற்சாலைகளை அமெரிக்காவுக்கு மீண்டும் கொண்டுவர வேண்டும். அப்படிக் கொண்டுவருபவர்களுக்கு புதிய வரி இருக்காது.
ஆப்பிள் நிறுவனம், தற்போது இந்தியாவுக்குச் செல்லவுள்ளதாகத் தெரிகிறது. அவர்கள் அப்படிச் செய்தால், ஆப்பிள் நிறுவனத்திற்கு நாங்கள் அதிக வரி விதிக்க வேண்டியிருக்கும். இது ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிரானது போல தோன்றலாம். ஆனால், எங்களால் தொடர்ந்து இதை அனுமதிக்க முடியாது.