சீனா செயலி நிறுவனங்களான டிக் டாக், வி சாட் ஆகியவற்றை வரும் ஞாயிறு முதல் தடைசெய்ய அமெரிக்க அரசு முடிவெடுத்துள்ளது. அமெரிக்கா - சீனா இடையே மோதல்போக்கு நிலவிவரும் நிலையில், தேசப் பாதுகாப்பைக் காரணம் காட்டி இந்த முடிவை அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது.
காணொலி பகிர்வு செயலியான வி சாட் வரும் ஞாயிறு முதல் நிச்சயம் தடைசெய்யப்படும் எனவும், இறுதி நிமிடத்தில் டிக் டாக் நிறுவனத்துடன் அதிபர் ட்ரம்ப் ஒப்பந்தம் மேற்கொள்ளும்பட்சத்தில் அந்நிறுவனத்திற்குத் தடை இருக்காது என வர்த்தகத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.