தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

டொனால்ட் ட்ரம்புக்கு கொரோனா பாதிப்பு இல்லை - கொரோனா பாதிப்பு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன.

Donald Trump  US government  US coronavirus case  US Health Department  கொரோனா பாதிப்பு  டொனால்ட் ட்ரம்ப் கொரோனா பாதிப்பு
Donald Trump US government US coronavirus case US Health Department கொரோனா பாதிப்பு டொனால்ட் ட்ரம்ப் கொரோனா பாதிப்பு

By

Published : Mar 15, 2020, 12:07 PM IST

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவை புளோரிடாவில் சந்தித்தார். இந்நிலையில் பிரேசில் அதிபருடன் வந்திருந்த அலுவலர்கள் மூன்று பேருக்கு கொரோனா (கோவிட்19) பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதையடுத்து டொனால்ட் ட்ரம்ப்புக்கும் கொரோனா வைரஸ் சோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்குக் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லையென்பது தெரியவந்துள்ளது.

முன்னதாக ட்ரம்ப், தான் கொரோனா வைரஸ் சோதனைக்கு தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். எனினும் தன்னை கவனித்துவரும் மருத்துவர்கள் உலகின் தலைசிறந்த மருத்துவர்கள். ஆகவே எனக்கு கொரோனா குறித்த அச்சம் இல்லை என்று தெரிவித்தார்.

இந்நிலையில் ட்ரம்பின் மருத்துவ அறிக்கை வெளியாகி உள்ளது. இந்த அறிக்கை குறித்த தகவலை வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது.

அந்நாட்டில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இரண்டாயிரத்து 700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அமெரிக்காவில் சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கொரோனாவை எதிர்க்க கோமியம் - ஹிந்து மகாசபாவின் புதிய திட்டம்!

ABOUT THE AUTHOR

...view details