தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

'வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேற மாட்டேன்' - அடம்பிடிக்கும் ட்ரம்ப்! - அமெரிக்க அதிபர் பைடன்

வாஷிங்டன்: வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ஆலோசகர்களிடம் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

ட்ரம்ப்
ட்ரம்ப்

By

Published : Dec 17, 2020, 9:40 PM IST

Updated : Dec 17, 2020, 9:46 PM IST

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றார். இருந்தபோதிலும், அதிபர் ட்ரம்ப் தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் இருந்துவந்தார். இதனைத்தொடர்ந்து, அவரை வெற்றியாளராக எலக்டோரல் காலேஜ் அறிவித்தது. அடுத்தாண்டு ஜனவரி 20ஆம் தேதி, ஜோ பைடன் அதிபராக பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில், பதவியேற்பு விழா நடைபெற்றாலும் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறப்போவதில்லை என ட்ரம்ப் தனது ஆலோசகர்களிடம் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் இருக்கும் ட்ரம்ப்

இதுகுறித்து அவரது ஆலோசகர் ஒருவர் கூறுகையில், "அவர் கோபத்தில் உணர்ச்சிவயப்பட்டு பேசிவருகிறார். வெள்ளை மாளிகையிலிருந்து அவர் வெளியேறுவார்" என்றார்.

இதற்கு வெள்ளை மாளிகை சார்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. முன்னதாக, டிசம்பர் 15ஆம் தேதி, பைடனை செனட் சபை தலைவர் மிட்ச் மெக்கானல் முதல்முறையாக வெற்றியாளராக அறிவித்தார்.

Last Updated : Dec 17, 2020, 9:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details