கரோனாவின் தாக்கம் பெரும்பாலான நாடுகளில் குறைந்து இருந்த போதிலும், சில நாடுகளில் அதன் இரண்டாம் அலை தொடங்கியுள்ளது. குறிப்பாக, அமெரிக்க அதிபர் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த போது, கரோனா தாக்கம் அங்கு மேலும் அதிகரித்தது. அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, ட்ரம்ப் முதல் முறையாக ரோஸ் கார்டனில் நேற்று (நவம்பர் 14) மக்களிடையே உரையாற்றினார்.
அழுகுனி ஆட்டம் ஆடும் ட்ரம்ப்! - அமெரிக்க அதிபர் தேர்தல்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து ட்ரம்ப் முதல்முறையாக மக்களிடையே உரையாற்றும்போது, தோல்வி குறித்து பேசாதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களுக்கு கரோனா தடுப்பூசியை அடுத்த ஓரிரு வாரங்களில் கொண்டு போய் சேர்த்து விடுவோம் என ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "அமெரிக்கர்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். தற்போதுள்ள அரசு ஊரடங்கை விதிக்காது. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது யாருக்கு தெரியும். அடுத்தது யாருடைய ஆட்சி என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும். ஆனால், எனது அரசு ஊரடங்கை விதிக்காது" என்றார்.
இருப்பினும், உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர திட்டங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என அமெரிக்க அரசு உத்தரவு விடுக்கவில்லை. ட்ரம்ப் அரசு பெருந்தொற்றுக்கு எதிராக அதிரடியான நடவடிக்கை எடுக்காததாலும் பைடன் குழுவினரிடம் ஒத்துழைப்பு அளிக்காததால் அமெரிக்காவின் கரோனா சூழல் மேலும் பாதிப்படையும் என சுகாதார வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.