அமெரிக்க நாடுகளில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் வியாழக்கிழமை தேங்க்ஸ் கிவ்விங் டே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி வெள்ளை மாளிகையிலும் தேங்க்ஸ் கிவ்விங் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் அதிபராக பொறுப்பில் இருப்பவருக்கு வான்கோழிகள் வழங்கப்படும். அந்த வான்கோழி மன்னிப்பை அதிபர் வழங்குவார். பொதுவாக தேங்க்ஸ் கிவ்விங் நிகழ்ச்சியின்போது வான்கோழி சமைக்கப்பட்டு பரிமாறப்படும். ஆனால், அதிபர் புஷ்ஷின் ஆட்சிக் காலம் முதல் வான்கோழிக்கு மன்னிப்பு வழங்கி அதனை சமைத்து உண்ணாமல் உயிருடன் வழங்கும் வழக்கம் தொடர்ந்து வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அதிபர் ட்ரம்ப்பிற்கு கார்ன், கோப் என இரண்டு வான்கோழிகள் வழங்கப்பட்டன. அந்த வான்கோழிகளை அவர் மன்னித்தார். இந்நிகழ்ச்சியில் ட்ரம்ப் வழங்கத்திற்கு மாறாக மிகவும் அமைதியாக இருந்தார். மேலும், ட்ரம்ப் மற்றும் மெலினா ட்ரம்பைத் தவிர இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பெரும்பாலானோர் மாஸ்க்குகள் அணிந்திருந்தனர்.