தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

2.2 லட்சம் கோடி டாலர் - நிதி ஒதுக்கீட்டுக்கு டிரம்ப் ஒப்புதல்!

வாஷிங்டன்: இரண்டு லட்சத்து 20 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான கரோனா வைரஸ் தடுப்புத் திட்டத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

Trump signs USD 2.2T
Trump signs USD 2.2T

By

Published : Mar 28, 2020, 2:37 PM IST

கரோனா வைரஸ் தொற்று 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. ஈரான், ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளில், இந்த வைரஸ் தொற்று அதிகளவு பரவிவருகிறது. அமெரிக்காவையும் இந்த தொற்று விட்டுவைக்கவில்லை என்றுதான் கூறவேண்டும். எதிர்பாராதவிதமாக, அமெரிக்காவில் கரோனா வைரஸ் பரவல் மிகக்கடுமையாக உள்ளது.

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளநிலையில், நிலைமையைச் சரிசெய்ய மிகப்பெரிய அளவிலான நிதியை, அந்நாட்டு அரசாங்கம் கரோனா வைரஸ் மீட்டெடுப்பு திட்டத்திற்கு ஒதுக்கியுள்ளது.

அதாவது இரண்டு லட்சத்துக்கு 20 ஆயிரம் கோடி டாலர் (2.2 டிரில்லியன் டாலர்) மதிப்புள்ள கரோனா வைரஸ் தடுப்புத் திட்டத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒப்புதல் வழங்கியுள்ளார். மக்களை பாதுகாக்கவும், கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி வழங்கவும், இந்த நிதி செலவிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஆப்கான் குருத்வாராவை தாக்கியவர்களில் ஒருவர் இந்தியர்!

ABOUT THE AUTHOR

...view details