மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக மோதல் நிலவிவருகிறது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் நோக்கில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 'மத்திய கிழக்கு திட்டம்' என்ற அமைதி திட்டத்தை நேற்று அறிவித்தார்.
வெள்ளைமாளிகையின் மூத்த ஆலோசகரும், ட்ரம்ப்பின் மருமகனுமான ஜராட் குஷ்னர் முயற்சியில் உருவான இந்தத் திட்டத்தின்படி, ஜெருசலேம் இஸ்ரேல் தலைநகராக அறிவிக்கப்படும், அதே சமயம் 1967ஆம் ஆண்டு இஸ்ரேல் ஆக்கிரமித்த கிழக்கு ஜெருசலேம் பாலஸ்தீன தலைநகராக அறிவிக்கப்படும், பாலஸ்தீனம் சுதந்திர நாடாக ஏற்றுக்கொள்ளப்படும், திட்டத்தின்கீழ் பாலஸ்தீனத்திற்கு ஒதுக்கப்பட்ட புதிய பகுதிகளில் நான்கு ஆண்டுகள் வரை இஸ்ரேலியர்கள் (யூதர்கள்) யாரும் குடியேறக் கூடாது.