தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அமெரிக்க காவல் துறை சீர்த்திருத்த ஆணையில் இன்று கையெழுத்திடும் ட்ரம்ப்! - அமெரிக்க காவல் துறை சீர்திருத்த ஆணையில் ட்ரம்ப் கையெழுத்து

வாஷிங்டன்: அமெரிக்க காவல் துறையில் சீர்த்திருத்தம் கொண்டுவரும் ஆணையில் ஜூன் 16ஆம் தேதி (இன்று) கையெழுத்திடவுள்ளதாக அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

trump
trump

By

Published : Jun 16, 2020, 10:22 AM IST

அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற 46 வயது ஆப்ரிக்க அமெரிக்கர் ஒருவர், காவல் துறை பிடியில் கொலைசெய்யப்பட்ட சம்பவம் அந்நாட்டையே அதிரச் செய்துள்ளது.

ஜார்ஜின் கொலைக்கு நீதி கேட்டும், ஆப்பிரிக்க அமெரிக்க மக்களின் உரிமையைப் பாதுகாக்க வலியுறுத்தியும், நிறவெறிக்கு எதிராக முழக்கமிட்டும் அந்நாட்டில் தொடர் போராட்டம் நடைபெற்றுவருகிறது.

காவல் துறை வன்முறையைத் தடுக்க சீர்த்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் குரல் எழுந்த வண்ணம் உள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை, அட்லாண்டாவில் ரேஷாத் ப்ரூக் (27) என்ற இன்னொரு ஆப்பிரிக்க அமெரிக்கரைக் காவல் துறையினர் சுட்டுக்கொன்றதை அடுத்து இந்த வலியுறுத்தலானது தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில், காவல் துறையில் சீர்த்திருத்தும் கொண்டுவரும் ஆணையில் ஜூலை 16ஆம் தேதி (இன்று) தான் கையெழுத்திடவுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

இது குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், "அந்த ஆணையில் நாளை (ஜூலை 16) நாங்கள் கையெழுத்திடவுள்ளோம். பிறகு செய்தியாளர்களை நான் சந்திப்பேன்.

நாட்டில் சட்ட ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும், அனைவருக்கும் அது பொதுவாக இருக்கு வேண்டும் என்பதே எங்களது நோக்கமாக உள்ளது" என்றார்.

இதையும் படிங்க : ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம்: போராட்டக்காரரை கீழே தள்ளி மண்டையை உடைத்த காவலர்கள்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details